அல்லிராஜா பற்றி
அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு தொடர்ச்சியான தொழில்முனைவர் (serial entrepreneur) ஆவார். அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முக்கிய தலைமைப் பதவிகளில் இருந்துள்ளார். அவர் தனது சொந்த முயற்சியால் கட்டியெழுப்பிய உலகளாவிய தொலைத்தொடர்பு மற்றும் கைத்தொலைபேசி வணிகத் துறையின் தற்போதயை ஆண்டு வருவாயானது சுமார் £1பில்லியனையும் தாண்டியுள்ளது. அவரது வணிகச் செயற்பட்டு முயற்சிகள் உலகளாவிய ரீதியில் 10,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கு வழிவகுத்துள்ளன. அவருக்கு மலேசியாவில் உள்ள AMIST பல்கலைக்கழகமானது வணிக நிர்வாக துறையில் கெளரவ டாக்டர் (Honorary Doctorate of Philosophy) பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
அல்லிராஜாவும் லைகாவும்
திரு அல்லிராஜா அவர்கள் லைகா குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். லைகாமொபைலானது இன்றுவரை 23 நாடுகளில் தனது கிளைகளை நிறுவியுள்ளது. அக்டோபர் 2013 இல் (லைகா நிறுவனம் அதன் உச்சபட்ச வளர்ச்சியில் இருந்தபோது), சண்டே டைம்ஸ்ஸின் முதன்மையான 250 தரவரிசையில் லைகாமொபைல் நான்காவது இடத்தைப் பிடித்தது. இந்த நிறுவனத்தின் கைத்தொலைபேசி பயனர்களின் தற்போதைய எண்ணிக்கை சுமார் 16 மில்லியன் ஆகும்.
The Asian Achievers Awards இன் ஆண்டின் சிறந்த தொழிலதிபருக்கான பிளாட்டினம் விருது, தொழில்முனைவோருக்கான கோல்டன் பீகாக் விருது, International Business Awards இன் தொழில்முனைவோருக்கான தங்க விருது ஆகியவை பல்வேறு சந்தர்ப்பங்களில் திரு அல்லிராஜாஅவர்களின் வணிக வெற்றியைக் குறிக்கும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட பாராட்டுக்களில் சிலவாகும். அவர் டிசம்பர் 2021 இல் உலகளாவிய பரோபகாரர் விருதையும் (Global Philanthropy Award) பெற்றார், இது அவருக்கு அமெரிக்க சிவில் உரிமைகளின் ஐகானாகத் திகழும் மரியாதைக்குரிய ஜெஸ்ஸி ஜாக்சன் அவர்களால் வழங்கப்பட்டது.

வரலாறு
அல்லிராஜா இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழராவார். அவர் 1980களில் ஒரு இளைஞனாக ஐரோப்பாவிற்குக் குடிபெயர்ந்தார். தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ள அவர், எதிர்காலத்தில் தனது இலங்கைக் குடியுரிமையை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகின்றார். 2009 ஆம் ஆண்டுமுதல் அவர் மூன்றாம் சார்லஸ் மன்னரினால் ஸ்தாபிக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளையின் (British Asian Trust) ஆலோசனைக் குழுவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்த அமைப்பு தெற்காசியாவில் உயர்தர திட்டங்களை வழங்குவதுடன் பிராந்தியம் முழுவதும் நேர்மறையான மாற்றத்தை மேம்படுத்துவதற்கு சமூக நிதிசார் உற்பத்திகளை பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றது. இந்த நோக்கத்திற்காக, பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளையானது, கல்வி, வாழ்வாதாரம், கடத்தல் எதிர்ப்பு, மனநலம் மற்றும் பாதுகாப்பு ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்தி, சமூகங்களின் வளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பிரச்சனைகளைக் கையாளுகின்றது.

தனிப்பட்ட வாழ்க்கை
அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தை என்ற பெருமைக்குரியவர். அவர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடாத சந்தர்ப்பங்களில், தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார். கிரிக்கெட், கால்பந்தாட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், பயணம் செய்தல் மற்றும் தமிழ் திரைப்படங்களைப் பார்ப்பது போன்றவற்றிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. விளையாட்டின் மீதான அவரது ஆர்வத்தை பிரதிபலிக்கும் வகையில், இந்தியாவின் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் லைகாவிற்கு ஒரு கிரிக்கெட் அணியை வைத்திருக்கிறார். இந்த அணி லைக்கா கோவை கிங்ஸ் என அழைக்கப்படுகிறது. இதுவும் இலங்கையின் பிரீமியர் லீக்கில் லைக்காவின் அணியான லைக்கா ஜாஃப்னா கிங்ஸ் அணியும் 2022 சீசனில். தத்தமது போட்டிகளில் வெற்றிவாகை சூடின. அத்துடன் லைகாமொபைல் 2010 ஆம் ஆண்டுமுதல் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து அணியானWest Ham United இன் ஆதரவாளராகவும், அனுசரணையாளராகவும் இருந்து வருகின்றது. மேலும் பிரெஞ்சு கால்பந்து அணியான Paris F.C யில் ஒரு பங்கையும் கொண்டுள்ளது.