அல்லிராஜா சுபாஸ்கரன்
இது லைகா குழுமங்களின் (Lyca Group) நிறுவனரும், தலைவருமான திரு அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் வலைப்பதிவு (Blog) ஆகும். இவ்வலைப்பதிவானது லைகா மொபைல், லைகா குழும நிறுவனங்கள், கையடக்க தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு வணிகம் தொடர்பான தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக ஆராய்வதுடன், திரு அல்லிராஜாவின் அறப்பணிகள் மற்றும் அவராற்றிவரும் தொண்டுகள் பற்றியும் விரிவாக விபரிக்கின்றது. இது லைகா குழுமத்தின் முக்கிய குறிக்கோள்கள் முதல், 2010 ஆம் ஆண்டில் ‘ஞானம்’ அறக்கட்டளை நிறுவப்பட்டது வரை பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கும்.
![Lyca_Group_Ocean அல்லிராஜா சுபாஸ்கரன்](https://allirajahsubaskaran.com/wp-content/uploads/2023/01/Lyca_Group_Ocean.png)
![Lyca_Group_Ocean Allirajah Subaskaran](https://allirajahsubaskaran.com/wp-content/uploads/2023/01/Lyca_Group_Ocean.png)
அல்லிராஜா சுபாஸ்கரன்
இது லைகா குழுமங்களின் (Lyca Group) நிறுவனரும், தலைவருமான திரு அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் வலைப்பதிவு (Blog) ஆகும். இவ்வலைப்பதிவானது லைகா மொபைல், லைகா குழும நிறுவனங்கள், கையடக்க தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு வணிகம் தொடர்பான தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக ஆராய்வதுடன், திரு அல்லிராஜாவின் அறப்பணிகள் மற்றும் அவராற்றிவரும் தொண்டுகள் பற்றியும் விரிவாக விபரிக்கின்றது. இது லைகா குழுமத்தின் முக்கிய குறிக்கோள்கள் முதல், 2010 ஆம் ஆண்டில் ‘ஞானம்’ அறக்கட்டளை நிறுவப்பட்டது வரை பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கும்.
![Lyca Mobile logo அல்லிராஜா சுபாஸ்கரன்](https://allirajahsubaskaran.com/wp-content/uploads/2023/01/Lyca-Mobile-logo.png)
அல்லிராஜா பற்றி
மனிதர்கள் இவ்வுலகில் எங்கிருந்த போதிலும், என்ன செய்தபோதிலும், எப்போதும் தங்கள் குடும்பத்தினருடனும் அன்பர்கள் நண்பர்களுடனும் இணைந்திருக்கக்கூடிய ஒரு உலகத்தை உருவாக்கும் உயரிய நோக்கத்துடனேயே அல்லிராஜா அவர்கள் லைகாமொபைலை உருவாக்கினார். இத்தொழில் முனைவர் இன்றும், லைகா நிறுவனத்தின் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள அனுபவங்களைத் தொடர்ந்தும் வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளார். இந்த நோக்கத்தினை அடைவதற்காக, அவர் உயர் லட்சியமும் தனது குடும்பத்தின் மீது ஆழ்ந்த பற்றும் உடைய தலைவர்களைத் தொடந்தும் தேடுகிறார்.
![Lyca Mobile logo Allirajah Subaskaran](https://allirajahsubaskaran.com/wp-content/uploads/2023/01/Lyca-Mobile-logo.png)
அல்லிராஜா பற்றி
மனிதர்கள் இவ்வுலகில் எங்கிருந்த போதிலும், என்ன செய்தபோதிலும், எப்போதும் தங்கள் குடும்பத்தினருடனும் அன்பர்கள் நண்பர்களுடனும் இணைந்திருக்கக்கூடிய ஒரு உலகத்தை உருவாக்கும் உயரிய நோக்கத்துடனேயே அல்லிராஜா அவர்கள் லைகாமொபைலை உருவாக்கினார். இத்தொழில் முனைவர் இன்றும், லைகா நிறுவனத்தின் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள அனுபவங்களைத் தொடர்ந்தும் வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளார். இந்த நோக்கத்தினை அடைவதற்காக, அவர் உயர் லட்சியமும் தனது குடும்பத்தின் மீது ஆழ்ந்த பற்றும் உடைய தலைவர்களைத் தொடந்தும் தேடுகிறார்.
சேவைகள்
2006 இல் லைகாமொபைல் நிறுவப்பட்ட காலத்திலிருந்து, லைகா குழுமமானது பல்வேறுதுறைகளிலும் பன்முகப்படுத்தப்பட்டு உயர்ந்தோங்கி வளர்ந்துள்ளது. லைகா குழுமம் தற்போது தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, சுகாதாரம், பயணத்துறை, தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சந்தைப்படுத்தல், விருந்தோம்பல் போன்ற பல்வேறுதுறைகளில் செயல்படும் பல நிறுவனங்களை ஒருங்கிணைக்கின்றது.
![Lyca Insure அல்லிராஜா சுபாஸ்கரன்](https://allirajahsubaskaran.com/wp-content/uploads/2023/01/Lyca-Insure.png)
நிதிச்சேவைகள்
Lyca Insure என்பது மோட்டார், பயணம், ஆயுள் மற்றும் கேஜெட் காப்பீடு ஆகியவற்றில் வெள்ளை-லேபிள் தயாரிப்புகளை வழங்கும் ஒரு காப்பீட்டு வழங்குநராகும்.
![_Lyca digital அல்லிராஜா சுபாஸ்கரன்](https://allirajahsubaskaran.com/wp-content/uploads/2023/01/Lyca-digital.png)
சந்தைப்படுத்தல்
Lyca Digital என்பது ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா முழுவதும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சேவைகளை வழங்கும் ஒரு டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிறுவனம் ஆகும்.
![Lyca Health-logo அல்லிராஜா சுபாஸ்கரன்](https://allirajahsubaskaran.com/wp-content/uploads/2023/01/Lyca-Health-logo.png)
சுகாதாரம்
Lyca Health என்பது UK-ஐ தளமாகக் கொண்ட ஒரு தனியார் மருத்துவ சேவையாகும். இது விரைவான நோயறிதல், வாக்-இன் GP சேவைகள், தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் இயன் மருத்துவம் (physiotherapy) ஆகிய மருத்துவ சேவைகளை வழங்குகிறது.
![Lyca Radio அல்லிராஜா சுபாஸ்கரன்](https://allirajahsubaskaran.com/wp-content/uploads/2023/01/Lyca-Radio.png)
ஊடகம் & பொழுதுபோக்கு
Lyca Radio என்பது லண்டனை தளமாகக்கொண்ட வானொலி (1458AM & DAB) நிலையமாகும். இது சமகால பாலிவுட் பாடல்கள், பாங்க்ரா, நகர்ப்புற ஆசிய இசை நகர்ப்புற ஆசிய இசை போன்றவற்றுடன் பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் சமீபத்திய பொழுதுபோக்கு கிசுகிசுக்கள் என்பவற்றையும் ஒலிபரப்புகின்றது.
அறப்பணிகள்
![ஞானம் அறக்கட்டளையை அல்லிராஜா சுபாஸ்கரன்](https://allirajahsubaskaran.com/wp-content/uploads/2023/01/Gnanam-Foundation-1.png)
அல்லிராஜா சுபாஸ்கரன் தனது மனிதநேய செயற்பாடுகளுக்காக நன்கு அறியப்பட்டவர். 2010 இல் அவர் லைகாவின் ஞானம் அறக்கட்டளையை தனது மனைவி பிரேமாவுடன் இணைந்து நிறுவினார். இந்த அறக்கட்டளைக்கு தொழில் முனைவரின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. இதன்மூலம் உலகிலுள்ள ஏழ்மையான பகுதிகளுக்கும் உதவி மிகவும் தேவைப்படும் மனிதர்களுக்கும் நிதி வழங்கப்படுகின்றது.
இந்த அறக்கட்டளையின் நோக்கம் சமூக, குடும்ப மற்றும் தனிமனித அடிப்படைகளில் மனிதர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதாகும். இது ஒரு தற்காலிக மேம்பாடல்லாது, நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு நீண்ட கால மேம்பாடாகும். இது குறித்த சமூகங்களுக்கு பாதுகாப்பு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு மற்றும் அவர்களின் திறன்களை வளர்ப்பதற்கான வழிமுறைகளை வழங்குவதன் மூலம் அச்சமூகம் தற்சார்பு சுதந்திரத்தை அடைய உதவுகின்றது. ஞானம் அறக்கட்டளையானது அவசரத் தேவைகளுக்குப் பதிலளிப்பதுடன் உலகளாவிய ரீதியில் தேவையுடையோருக்கு உதவுமுகமாக, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் லட்சியமாக கொண்டுள்ளது.

![Gnanam Foundation Allirajah Subaskaran](https://allirajahsubaskaran.com/wp-content/uploads/2023/01/Gnanam-Foundation-1.png)
அபிவிருத்தி
MVNO (Mobile Virtual Network Operator – மொபைல் மெய்நிகர் வலையமைப்பு இயக்குநர்) தொழில்நுட்பமே லைகாவின் மொபைல் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக இருக்கும் தொழில்நுட்பமாகும். MVNOகள் வயர்லெஸ் தகவல் தொடர்பு சேவைகளுக்கான மறுவிற்பனையாளர்களாகும். மூன்றாம்-தரப்பு MNO (Mobile Network Operator – மொபைல் வலையமைப்பு இயக்குநர்) ஒன்றிடமிருந்து வயர்லெஸ் கொள்திறனை மொத்த விலையில் குத்தகைக்கு எடுப்பதன் மூலம், MVNO வானது இந்த கொள்திறனை (திறம்பட, ‘minutes, texts and data’) நுகர்வோருக்கு குறைந்த சில்லறை விலையிலும் அதன் சொந்த வணிக பிராண்டின் கீழும் மறுவிற்பனை செய்யலாம்.லைகா நிறுவனம் தற்போது MVNO மற்றும் MNO நெட்வொர்க்குகளை உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது.
லைகா குழுமமானது இப்போது, புதுமையான டிஜிட்டல்-ஃபர்ஸ்ட் வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுவதன்மூலமும், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் தளத்தில் புதிய வணிக வாய்ப்புகளையும் உருவாக்குவதன் மூலமும் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறது. நிறுவனமானது அதன் தற்போதைய நோக்கத்திற்கு ஏற்ப, அதிநவீன டிஜிட்டல் தொழிநுட்ப வளங்களிலும் ஒருங்கிணைந்த திறமையான ஊழியர்களிலும் தன்னை முதலீடு செய்கிறது. லைகாவைப் பொறுத்தவரை, அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய பாதைகளை உருவாக்கும் இந்த உற்சாகமான பயணத்தில் அனைத்து குழு உறுப்பினர்களும் பங்கேற்பது முக்கியமானதாகும்.
![homepage image 4 அல்லிராஜா சுபாஸ்கரன்](https://allirajahsubaskaran.com/wp-content/uploads/2022/12/device-repair-mask-01.png)
![wireless அல்லிராஜா சுபாஸ்கரன்](https://allirajahsubaskaran.com/wp-content/uploads/2022/12/device-repair-1b.png)
![Customer service அல்லிராஜா சுபாஸ்கரன்](https://allirajahsubaskaran.com/wp-content/uploads/2022/12/device-repair-mask-01.png)