ஞானம் அறக்கட்டளையானது தொழிலதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் அவரது மனைவி பிரேமாவால் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா அவர்களின் நினைவாக இந்த அறக்கட்டளைக்கு ஞானம் எனப் பெயரிடப்பட்டது. இது உலகின் மிகவும் ஏழ்மையான பகுதிகளுக்கும் உதவி தேவைப்படுபவர்களுக்கும் நிதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாழ்வுகளை மேம்படுத்துதல்
ஞானம் அறக்கட்டளையின் நோக்கம் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதாகும்.அத்துடன் இது குறுகிய கால மேம்பாடுகளுக்குப் பதிலாக, தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடைய நீண்டகால ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளது. இதுவரை இந்த நோக்கத்திற்காக, குறித்த சமூகங்களின் பாதுகாப்பு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, அவர்களின் சமூக உறுப்பினர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அச்சமூகங்கள் தன்னிச்சையாக செயற்பட இவ்வமைப்பு உதவுகிறது.
2016 ஆம் ஆண்டில், வி கேர் ஃபார் ஹ்யூமனிட்டி (We Care for Humanity) நடத்திய Global Officials of Dignity விருதுகளில் ஞானம் அறக்கட்டளைக்கு ‘உலகின் மிகச் சிறந்த மனிதாபிமான அமைப்பு’ )Greatest Humanitarian Organization of the World( என்ற பட்டம் வழங்கப்பட்டது.
ஞானம் அறக்கட்டளையின் நிறுவனர்கள்
லைகா மொபைலின் தலைவரான அல்லிராஜா சுபாஷ்கரன் அவர்கள் மற்றும் இணை நிறுவனர் பிரேமா சுபாஸ்கரன் – லைகா ஹெல்த் தலைவர் தம்பதியினர் இணைந்து உலகளவில் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ ஞானம் அறக்கட்டளையை நிறுவினர்.
அல்லிராஜா உலகளாவிய தொலைத்தொடர்பு மற்றும் மொபைல் துறையில் செயல்படும் லைகா குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார் .மேலும் அவர் மூன்றாம் சார்லஸ் மன்னரால் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளையின் ஆலோசனைக் குழுவிலும் (Advisory Council of the British Asian Trust) அங்கம் வகிக்கின்றார்.
ஞானம் அறக்கட்டளையின் திட்டங்கள்
இந்த அறக்கட்டளையின் கடந்தகால திட்டமானது 2015 ஆம் ஆண்டு இலங்கையில் 150 வீடுகளை நிர்மாணித்து, பூந்தோட்டம் இடம்பெயர்ந்த மக்கள் முகாமில் வசித்து வந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 2015 இல் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட விழாவில் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஞானம் அறக்கட்டளை முன்னர் நைஜீரியாவில் உள்ள டாமிலோலா டெய்லர் அறக்கட்டளையுடன் இணைந்து அங்கு ஒரு நூலகத்தைக் கட்டுவதற்கு நிதியளித்தது. மேலும் இலங்கையில் உள்ள 585 அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவளித்து, பாதுகாப்பான வீடு மற்றும் கல்வியை வழங்குகிறது . சூடானில் உள்ள முஸ்லீம் எயிட் நிறுவனத்துடன் இணைந்து , நூற்றுக்கணக்கான அண்டை குடும்பங்களுக்கு பயனளிக்கும் கிணறு ஒன்றைக் கட்டுவதற்கு இந்த அறக்கட்டளை உதவியது. பல மூன்றாம் உலக நாடுகளில் நீர் விநியோகத்தில் பெரும் சிக்கல்கள் இருப்பதை அறக்கட்டளை புரிந்து கொண்டுள்ளதுடன் அடிப்படைத் தேவைகளுக்கான அணுகலை மேம்படுத்த உதவுவது அதன் முக்கிய நோக்கமாகும்.
அவசர முறையீடுகள்
சமூகங்கள், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுடனான அதன் பணியுடன், இந்த அறக்கட்டளையானது உதவிகோரும் அவசர முறையீடுகளுக்கும் உடனடியாகப் பதிலளிக்கிறது. ஞானம் அறக்கட்டளை தற்போது இலங்கை, சூடான், இந்தியா, தான்சானியா, பாகிஸ்தான், ருமேனியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இது எதிர்வரும் ஆண்டுகளில் உலகளாவிய திட்டங்களுடன் மேலும் வளர்ச்சியடையும்.