அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

01

மொபைல் மெய்நிகர் வலையமைப்பு செயல்படுத்துனர் (MVNO) என்றால் என்ன?

மொபைல் மெய்நிகர் வலையமைப்பு செயல்படுத்துனர் என்பது வயர்லெஸ் தகவல்தொடர்பு சேவை வழங்குநராகும். இது தனது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு உபயோகிக்கும் வயர்லெஸ் வலையமைப்பு உள்கட்டமைப்பின் உரிமையைக் கொண்டிருக்காது.

அல்லிராஜா சுபாஸ்கரன்

02

MVNO க்களால் ஏன் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவான சேவைகளை வழங்க முடிகிறது?

ஒரு MVNO ஒரு MNO (மொபைல் வலையமைப்பு செயல்படுத்துனர்) உடன் அதன் வலையமைப்பின் சேவைகள் பலவற்றை அணுகுவதற்கு மொத்த விலையில் ஒப்பந்தம் செய்துகொள்ளும். இதனால் MVNOவால் அதன் சொந்த வாடிக்கையாளர்களுக்கு மலிவான சில்லறை விலையில் சேவைகளை வழங்க முடியும்.

03

வேறுபட்ட MVNO வணிக மாதிரிக் கூறுகள் (Different MVNO Business Model Components) என்றால் என்ன?

இந்த கூறுகள் அடிப்படை வலையமைப்பு உள்கட்டமைப்புக்கான அணுகலைக் கொண்டிருக்கின்றன; இது சேவை விலை, கட்டமைப்பு மற்றும் பணம் வசூலித்தல் அமைப்புகள்; வாடிக்கையாளர் உறவுகளின் மேலாண்மை, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளன.

04

மேம்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் என்றால் என்ன?

இந்த MVNO ஆனது அதன் சொந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அதனால் இது, தான் வழங்கும் சேவைகளின் மீது கூடுதல் கட்டுப்பாட்டை கொண்டுள்ளது. MVNO இன் மேம்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மாதிரியானது சிம் மற்றும் தரவு பயன்பாடுகள் போன்ற கூடுதல் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்-உரிமை, பிராண்டிங், வேறுபடுத்துகை ஆகியவற்றில் முக்கிய கவனத்தைக் கொண்டுள்ளது.

05

முழுமையான மொபைல் மெய்நிகர் வலையமைப்பு செயல்படுத்துனர் என்றால் என்ன?

இந்த வகை MVNO ஆனது அதன் வலையமைப்பை MNO வுக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கிட்டத்தட்ட ஒத்த தொழில்நுட்பத்துடன் செயல்படுத்துகிறது. ஒரு முழுமையான MVNO வில், MNO வுடன் ஒப்பிடுகையில் அதற்கு சொந்தமான ரேடியோ வலையமைப்பு மட்டுமே இல்லாதிருக்கும்.

06

சேவை வழங்குநர் (Service Provider) என்றால் என்ன?

ஒரு சேவை வழங்குநர் ஆனது அதன் சொந்த சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் சேவை, விநியோகம் மற்றும் விற்பனை செயல்முறைகளுக்கு பொறுப்பாக இருக்கின்றது. இது MNO ஆல் நியமிக்கப்பட்ட சில்லறை விலையில் இருந்தும் வேறுபட்டு, சுயாதீனமாக அதன் சொந்தக் கட்டணங்களை அமைத்துக்கொள்ளும்.

07

பிராண்டட் மறுவிற்பனையாளர் என்றால் என்ன?

இந்த மறுவிற்பனையாளர் MNO இன் வசதிகளையே முழுவதுமாக தங்கியிருப்பதுடன் எந்தவொரு வலையமைப்புசார் கூறுகளுக்கும் உரிமையாளர் அல்ல. ஒரு பிராண்டட் மறுவிற்பனையாளர் தனக்குரிய சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையை இயக்கலாம்.

08

MVNO க்கள் ஒழுங்குபடுத்தப்பட்டதா?

ஐரோப்பிய ஆணையகம் 2003 இல் தேசிய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளர்களுக்கு ஒரு பரிந்துரையை வழங்கியது, அதாவது பொது கைத்தொலைபேசி வலையப்புகளில் மொத்த அணுகல் மற்றும் அழைப்பு தோற்றத்திற்கான சந்தையின் போட்டித்தன்மையை ஆய்வு செய்ய அவர்களுக்கு அறிவுறுத்தியது. இந்த ஆய்வின் விளைவாக, பல நாடுகளில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அயர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் MVNO களுக்கு வலையமைப்புகளை திறக்க செயல்படுத்துனர்களை நிர்ப்பந்தித்தன.

அல்லிராஜா சுபாஸ்கரன்
© 2025 அல்லிராஜா சுபாஸ்கரன்