லைகா குழுமம் உலகளாவிய தொலைத் தொடர்பு மற்றும் மொபைல் துறைக்குள் செயல்பட்டு வருகிறது. தற்போது மேலும்பல தொழில்களிலும் விரிவடைந்துள்ளது. சிறந்த டிஜிட்டல்-முதல் உள்ளடக்கம் மற்றும் சேவைகள் மூலம் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள அனுபவங்களை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கமாகும். 

Lyca Groupநான்கு முக்கிய குறிக்கோள்களை கொண்டுள்ளது. அவை பின்வருமாறு: தொழில்முனைவு, நம்பிக்கை, டிஜிட்டல்-ஃபர்ஸ்ட் கவனம் மற்றும் வேகம்.. 

Founded to Keep Family and Friends Connected 

அல்லிராஜா சுபாஸ்கரன்லைகா குழுமம் லைகா உரிமையாளர், நிறுவனர் மற்றும் குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் லைக்காமொபைலை (தற்போது லைக்கா குழுமமாக மாறியுள்ளவற்றின் முதல் நிறுவனம் 2006 இல் நிறுவப்பட்டது) எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்,மக்கள் எப்போதும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு உலகத்தை உருவாக்குவதற்கான ஒரு உயர் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கினார்.அல்லிராஜா சுபாஸ்கரன் இந்த இலக்கை அடைவதற்கு தமது லட்சியம் மற்றும் குடும்பம் மீது கவனம் செலுத்தும் நபர்களே லைக்கா குழுமத்திற்குள் தொடர்ந்தும் தலைவர்களாக செயல்பட வேண்டுமென நாடுகிறார். 

லைகா குழும நிறுவனங்கள் 

லைகாமொபைல் நிறுவப்பட்டதில் இருந்து, லைகா வளர்ச்சி அடைந்து, பன்முகப்படுத்தப்பட்டு, இப்போது தொலைத் தொடர்பு, சுகாதாரம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, பயணம், நிதி சேவைகள், தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் இயங்கும் பல நிறுவனங்களை இணைத்துள்ளது. இந் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் லைக்கா நிறுவனம் முதன்முதலில் நிறுவப்பட்டபோது கொண்டிருந்த குறிக்கோள்களை உள்ளடக்கியது.  

இந்த நிறுவனங்களில், லைக்கா கோல்ட் (Lyca Gold) ஆனது இங்கிலாந்தின் முதலாவது மற்றும் ஒரேயொரு ரெட்ரோ ஆசிய இசை நிலையம் ஆகும்,இது பழையபாடல்களில் தொடங்கி அனைத்து வகையான பாலிவுட், பஞ்சாபி மற்றும் உருது பாடல்களையும் ஒலிபரப்புகிறது. லைகா ரெமிட் (lyca remit) என்பது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சேவை ஆகும். இது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் பணம் அனுப்பும் சேவையாகும்.  

டிஜிட்டல் சந்தைப்படுத்தும் நிறுவனமான லைகா டிஜிட்டல் ஆனது ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா முழுவதும் டிஜிட்டல் சேவைகளை வழங்குகிறது. மேலும் லைகா காப்புறுதி ஆனது மோட்டார், பயணங்கள், வாழ்க்கை மற்றும் கேட்ஜெட் இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்கான வெள்ளை-லேபிள் தயாரிப்புகளை வழங்குகிறது. 

எதிர்காலம் 

லைகா குழுமத்தின் பரிணாமத்தின் அடுத்த கட்டம் டிஜிட்டல்-ஃபர்ஸ்ட் ஆகும். புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள அதன் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள இது மேலும்பல வாய்ப்புகளை உருவாக்குகின்றது. இந்த நோக்கத்திற்காக, இந்த குழுமம் தனது டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தி வருவதுடன் பல புதிய படைப்புகளையும் அதன் அப்கிரேடு செய்யப்பட்ட வணிகப் பிரிவுகளில் நிறுவியுள்ளது. 

லைகா குழுமம் தற்போது அதிநவீன டிஜிட்டல் வளங்கள் மற்றும் அதன் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் திறமைமிக்கவர்களில் முதலீடு செய்து வருகிறது. இதன் மூலம் தனது செயல்பாடுகளில் மேலும் சுறுசுறுப்பாகவும், அதன் அணுகுமுறையில் மேலும் புரட்சிகரமாகவும் மாறுகின்றது. 

லைக்கா குழுமம் புதுமையான சிந்தனைகளுடையது, பழமையான வழக்கங்களுக்கு சவால் விடும் ஆர்வத்தில் நிறுவப்பட்டது. இதன் புதிய சகாப்தம் ஒரு தைரியமான முன்னோக்கிய படியாகும், இது புத்தம் புதுமையான வகையில் வாடிக்கையாளர்-முன்னுரிமை அனுபவங்களை உருவாக்கும் குழுவின் பாரம்பரியத்தை தொடர்கிறது.