உலகின் மிகப்பெரிய மொபைல் விர்ச்சுவல் நெட்வொர்க் ஆபரேட்டர் (MVNO) ஆன Lyca Mobileலானது சமீபத்தில் பல சேவை வழங்குநர்களால் தமது ரோமிங் கட்டணங்கள் பட்டியலை மீள அறிமுகப்படுத்தியதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்தது.

இந்த கட்டணங்கள் காரணமாகவே இங்கிலாந்தில் பலர் தமது சேவை வழங்குநர்களை மாற்றுவது (அல்லது மாற்றியது) இடம்பெற்றுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. கேள்வி கேட்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், பிக் ஃபோர் அல்லாத UK வழங்குநர்களிடமிருந்து வழங்கப்படும் இலவச ரோமிங் கட்டணங்கள் தங்களை மாறச் செய்யும் என்று கூறியுள்ளனர்.

ரோமிங் கட்டணம் பரவலான குழப்பத்தை ஏற்படுத்துகிறது

ரோமிங் கட்டணங்கள் தொடர்பான பொதுவான குழப்பமும் உள்ளது, UK இல் உள்ள 51% மொபைல் ஒப்பந்த வாடிக்கையாளர்கள், தங்களின் தற்போதைய வழங்குனர் மீண்டும் ரோமிங் கட்டணங்கள் பட்டியலை அறிமுகப்படுத்தியது பற்றி தெரியாது என்று கூறியுள்ளனர். மேலும், பதிலளித்தவர்களில் 39% பேர் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில்(EU) ரோமிங்கிற்கு செலுத்த வேண்டிய தொகையைப் புரிந்து கொண்டதாக நம்பினர்.

வாழ்க்கைச் செலவு நெருக்கடி மீதான தாக்கம்

பல முக்கிய வழங்குநர்களால் ரோமிங் கட்டணங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியிருப்பது, இங்கிலாந்தில் உள்ள மக்கள் ஏற்கனவே உயர்ந்து வரும் எரிசக்தி கட்டணங்கள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் நேரத்தில் வந்துள்ளது. இதன் காரணமாக, நுகர்வோர் தங்கள் வீட்டுக் கட்டணத்தைக் குறைக்கும் வழிகளை அதிகளவில் நாடுகின்றனர். Lyca Mobile ஆல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புக்கு பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர், வாழ்க்கைச் செலவு நெருக்கடி என்பது அவர்களின் தற்போதைய தொலைபேசி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கான பொருளாதார காரணியாக இருப்பதாகக் கூறியுள்ளனர். விடுமுறை என்று வரும்போது, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஐரோப்பாவில் ஒரு பதினைந்து நாட்கள் விடுமுறைக்கு ரோமிங் கட்டணம் £100க்கு மேல் அதிகரிக்கின்றது.

விடுமுறை பழக்கங்களை மாற்றுதல்

ரோமிங் கட்டணங்களின் பரவலான மறுஅறிமுகத்துடன் இணைந்த வாழ்க்கைச் செலவு நெருக்கடியானது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் போது விடுமுறைக்கு வருபவர்கள் தங்கள் தொலைபேசிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதில் உறுதியான தாக்கத்தை கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வருகை தருபவர்கள் வெளிநாட்டில் இருக்கும் போது அவர்கள் பயன்படுத்தும் டேட்டாவின் அளவைக் கட்டுப்படுத்துகின்றனர்.

Lyca Mobile: UK குடும்பங்களுக்கான செலவுகளைக் குறைக்கிறது

வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் UK வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், EU ரோமிங் கட்டணங்களை மீள அறிமுகப்படுத்தாத ஒரே சேவை வழங்குநர் Lyca Mobile ஆகும். அல்லிராஜா சுபாஸ்கரன் நிறுவனர் மற்றும் அதன் CEOஅல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள், மக்கள் எவ்வளவு தூரம் எங்கெங்கு சுற்றித் திரிந்தாலும் தமது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் எப்போதும் அர்த்தமுள்ள வகையில் இணைந்திருக்கக்கூடிய உலகத்தை உருவாக்கும் தனது உயரிய நோக்கைப் பற்றி பேசியுள்ளார். ரோமிங் கட்டணங்களை மீள அறிமுகப்படுத்தாததன் மூலம், லைகா மொபைலும் திரு அல்லிராஜா சுபாஷ்கரன் அவர்களும் வாடிக்கையாளர்களைக் கவரக்கூடிய விலைப் புள்ளியைத் தொடர்ந்தும் வழங்கிவருகின்றனர். இந்த நடவடிக்கையானது உலகின் குறைந்த விலை சர்வதேச அழைப்பு நெட்வொர்க்காக நிறுவனத்தின் நிறுவப்பட்ட பாரம்பரியத்தை தொடர்ந்தும் ஆதரிக்கிறது.